அதிர்ந்த உலகம்..! இஸ்ரேலில் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு: ஓ மை காட்

முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டுபிடித்துள்ளனர்.அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஏசு அங்குதான் வளர்ந்து இருக்க வேண்டும் என இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து குறித்து இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் கென் டார்க் கூறியதாவது:-

மேரி மற்றும் ஜோசப் நாசரேத்தில், வாழ்ந்ததை நம்புகிறேன். தூதர் கபிரியேல் மரியாளிடம் நீ தேவனுடைய குமாரனை பெறுவாய் என வெளிபடுத்தினார். அந்த குழந்தைக்கு இயேசு என பெயரிட்டனர். இயேசு சிறு வயதில் வாழ்ந்த இந்த வீடு நாசரேத்து சிஸ்டர் கான்வென்ட் சாலையை அடுத்து உள்ள சர்ச் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கண்டு பிடிப்பின் மூலம் ஏசுகிறிஸ்து காலத்தின் பல அறிய உண்மைகள் வெளி வரும். நாகரீகம்,கலாச்சாரம்,வாழ்க்கை முறை அனைத்தும் உலகிற்கு தெரிய வரும் என்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்