பாரதி இல்ல சிறுவர் இல்லத்திறக்கான ஒரு மாத காலத்திற்க்கு தேவையான நூல்டிஸ் பக்கேற் மற்றும் ரின் மீன் ஆகிய உணவு பொருட்களை அன்பளிப்பு

எமது புலம்பெயர் உறவான இத்தாலி நாட்டை சேர்ந்த ஜெயமலர் சுதர் அவர்களால் தனது தாயாரான இராசம்மா அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 108 யுத்தத்தால் சொந்தங்களை இழந்த பாரதி இல்ல சிறுவர் இல்லத்திறக்கான ஒரு மாத காலத்திற்க்கு தேவையான நூல்டிஸ் பக்கேற் மற்றும் ரின் மீன் ஆகிய உணவு பொருட்களை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.
இன்று தனது தாயாரின் நினைவு தினத்தில் இல்ல சிறார்களுக்கான ஒரு மாதகால உணவு இருப்பை உறுதி செய்துள்ள ஜெயமலர் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பிலும் இல்ல சிறார்களின் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அமரர் இராசம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்