07 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் நிதியொதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 07 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு சிறப்பித்தார் அத்துடன் சுகாதார அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், திவிநெகும அபிவிருத்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் ஆகியோர்கள் கலந்துகொண்டு குறித்த விளையாட்டுக் கழக தலைவர்களிடம் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.
அபு அலா –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்