ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைத்தமை இலங்கைக்குக் கிடைத்த வெற்றி! – பிரதமர் அறிவிப்பு 

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைக்கப்பெற்றுள்ளதானது இலங்கைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றுப் புதன்கிழமை  மாலை விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர்,
“மக்களினது உரிமைகளை பாதுகாத்து, ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளின் பிரதிபலனாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
இந்த சலுகையால் ஆடை உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய சந்தைகளுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்யமுடியும். இதன்மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், வருமான வழிவகைகளும் உருவாகும்.
எனவே,ஜி.எஸ்.பி. வரிச்சைலுகை மீள கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்