“பைரவா” திரை விமர்சனம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெறும் அரசியலை முன்னெடுக்கிறது பைரவா. மேலும், சாமான்யன் சந்திக்கும் சில முக்கிய பிரச்னைகளை அவனது கோணத்தில் இருந்தே காட்டியிருக்கிறார்கள். இதனை, பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருவன் தனி மனிதனாக பலம் வாய்ந்த அரசியல்வாதியை எப்படி எதிர்த்து போராடுகிறான் என்பது திரைக்கதை.

படத்தின் முதல் பாதி காமெடி + காதல் என நகர்ந்து கொண்டிருக்க , சிறிய ஃப்ளாஷ்பேக் ஒன்றை கூறி தன்னுடைய பிரச்னைகளை கதாநாயகனிடம் புரிய வைக்கிறார் கதாநாயகி. ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சற்று இழுவையாக இருந்தாலும், மோசமில்லை. இடைவேளைக்கு, சில நிமிடங்களுக்கு முன்பு இவ்வாறான பிரச்சனைகள் உள்ளது என்பதை கதாநாயகன் புரிந்து கொள்கிறார். அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள், சண்டை காட்சியுடன் முடிகிறது பைரவாவின் முதல் பாதி.

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலாமாக பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்