“பைரவா இப்படியாச்சே…” வருந்தும் படக்குழு!


தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. ரசிகர்களின் எதர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம்வரை கேரளாவில் இப்படம் ரிலீஸாகுமா ஆகாதா என குழப்பம் நீடித்தது. ஆனால் ஒருவழியாக பிரச்சனை முடிந்து படம் கேரளாவில் ரிலீஸாகியுள்ளது. ஆனால் அங்கு மல்டிப்ளக்ஸ் மற்றும் அரசு திரையரங்கம் என மொத்தம் 90 திரையரங்குகளில் மட்டுமே பைரவா ரிலீஸ்ஆகியுள்ளது. இது படக்குழுவினருக்கு மிகப்பெரிய
பின்னடைவாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்