மாளிகைக்காடு சபீனாவில் வித்தியாரம்ப நிகழ்வு

 

 

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்றுமுன்தினம் (11) புதன்கிழமை நாடு பூராகவும் நடைபெற்றது.

இதில் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும், மார்க்க ஒப்பீட்டு ஆய்வாளரும்,சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவப் பிஞ்சுகளுக்கு ஏடு துவக்கி அகரம் எழுத வைத்து பரிசில்கள் வழங்கினார்.

மேலும் இந்த விழாவில் கல்வியதிகாரி பரதன் கந்தசாமி,  சட்டத்தரணி எம்.ஐ.ஆதம்பாவா, பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளரான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் போது மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் பாடசாலைக்கு அலுவலக தளபாடங்களை அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்