ஆரையூர் அருள் அவா்களின் இறையின்பப் பாவாரம் நுால் வெளியீட்டு விழா

செம்மொழிப்புலவர் ஆரையம்பதி மூ.அருளம்பலம் அவா்களின் ”இறையின்ப பாவாரம்” என்ற பக்தி இலக்கிய நுால் வெளியீட்டு விழா எதிர்வரும் தை, 22.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 க்கு கல்லடியில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற இருக்கின்றது.

எழுத்தாளர் க. சபாரெத்தினம் அவாகளின் தலைமையில் இடம்பெற இருக்கும் இவ் நிகழ்வில்,

முதன்மை அதீதியாக திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் (மாகாண கலாசார பணிப்பாளர்) அவர்களும்

கௌரவ அதீதிகளாக கௌரவ பா. சிறிநேசன்(பாரளுமன்ற உறுப்பினர்), கௌரவ சீ.யோகேஸ்வரன்(பாரளுமன்ற உறுப்பினர்), கௌரவ ச. வியாளேந்திரன்(பாரளுமன்ற உறுப்பினர்) ஆகியேரும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

சிறப்பு அதீதிகளாக
திரு .வ. கனகசிங்கம் (கிழக்கு பல்கலைக்கழக முதல்வர்), ப.கந்தசாமி (கல்முனை தமிழ்சங்க தலைவர் ) திரு.ந. வாசுதேவன் (வாழைச்சேனை பிரதேச செயலாளர்) மற்றும் திரு.ந.கிருஸ்ணபிள்ளை (மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர்) அவா்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்துவிட்ட இறை முகூர்த்தங்களின் மீது கும்மி, காவியம், காவடிப்பாடல் மற்றும் பக்திபாடல்களாக செம்மொழிப்புலவா் திரு.ஆரையூர் அருள் அவா்களால் இயற்றப்பட்ட பக்தி இலக்கியங்களை தொகுத்தாக்கப்பட்டு மக்களின் கைகளுக்கு கையளிக்கப்படும் இவ் நிகழ்வில் அனைவரும் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் வெளியீட்டு விழா ஏற்பாட்டுக் குழுவினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்