எதிர்காலத்தை எதிர்நோக்கும் அதிரடி திட்டங்கள்: தயாராகும் நோக்கியா

நோக்கியா மற்றும் ஆரஞ்சு நிறுவனங்கள் இணைந்து எதிர்காலத்தில் 5ஜி மொபைல் நெட்வொர்க்களை உருவாக்கி வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் “அல்ட்ரா பிராட்பேண்ட்” மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of things) வசதி உள்ளிட்டவை அடங்கும். இது குறித்து வெளியாகியுள்ள நோக்கியா வரைபடத்தில் 5G நெட்வொர்க் மொபைல் போன்களை கடந்து பல்வேறு வசதிகளை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஆடைகள் முதல் சுங்க வரி செலுத்துவது வரை பல்வேறு வசதிகளை இந்த தொழில்நுட்பம் கொண்டிருக்கும். ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டியில் இருந்து தானியங்கி ரோபோட் போன்ற வசதிகள் வழங்கப்படுவதால் மொபைல் நெட்வொர்க் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய திட்டங்கள் “டைனமிக் நெட்வொர்க் ஸ்லைசிங்” (Dynamic Network Slicing) மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட நெட்வொர்க்களை பல்வேறு வசதிகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து, இந்த வசதி வழங்கப்படும் சாதனத்திலேயே இயக்க முடியும்.

இத்துடன் அதிக-பேண்ட்வித் கொண்ட செயலிகளும் இடம் பெறும் என கூறப்படுகின்றது. குறிப்பாக 8K வீடியோ வசதி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங் உள்ளிட்டவை இடம் பெறுகிறது. நோக்கியா மற்றும் ஆரஞ்சு குழுவினர் பணியாற்றி வரும் புதிய திட்டங்கள் தற்சமயம் வரை 4.5G மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இவை 4.9G நெட்வொர்க் மூலம் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது. இவை ஏற்கனவே நொடிக்கு 1ஜிபி என்ற வேகத்தில் டேட்டாவினை வழங்குவதாக கூறப்படுகின்றது.

தற்சமயம் வரை 90 வாடிக்கையாளர்கள் 4.5G நெட்வொர்க்களை பயன்படுத்தி வருகின்றனர். 4G நெட்வொர்க்களை விட பத்து மடங்கு வேகம் வழங்கும் 4.5G ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின் புதிய அப்டேட் மூலம் 4.9G மற்றும் 5G வழங்கப்படும். இவை ஒரு நொடிக்கு அதிக அளவிலான ஜிபி என்ற வேகம் வழங்கும்.

நோக்கியா போன்றே சாம்சங் நிறுவனமும் 5G நெட்வொர்க் திட்டங்களை டி-மொபைல் நிறுவனத்துடன் இணைந்து வழங்க இருக்கிறது. கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் சைனா மொபைல் மூலம் 5G சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்