வ/ நெடுங்கேணி சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி

வ/ நெடுங்கேணி சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அதிபர் திரு.லோ.விமல்ராஜ் தலைமையில் 31.01.2017 இன்று நடைபெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2016ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
2016ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் சித்தியெய்துள்ளனர். இவர்களில் மாணவன் ஒருவர் 180 புள்ளிகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 13வது இடத்தையும், வவுனியா வடக்கு வலயத்தில் 1ம் இடத்தையும் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது.
குறித்த பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரமும், விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு ஏக்கர் காணியை ஒதுக்கிக்கொடுப்பதும், கணினித்தொகுதி ஒன்றும் தேவையாகவுள்ளதாக அதிபர் தெரிவிக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்