அட்டன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

 

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இவ்வருடம் குழு விளையாட்டுகளாக அமைந்திருந்தன.

கரப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எல்லே, வீச்சு பந்து என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.

நோர்வூட்  விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வலவை இல்லம் முதலாம் இடத்தையும், மகாவலி இல்லம் இரண்டாம் இடத்தையும்,  களனி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றக் கொண்டது.

பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ் போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீகுமார்  நெறிப்படுத்தியிருந்தார்.

(க.கிஷாந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்