தாழ்வுபாடு வளனார் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள்…

பிரதம விருந்தினராக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்…
மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட தாழ்வுபாடு புனித வளனார் றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 02-02-2017 வியாழன் மாலை 2 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் ஸ்டான்லி டிமேல் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நல்ல பல கருத்துக்களை முன்வைத்தார், அவ்வாறு அவர் தெரிவிக்கையில் மாணவர்கள் தமது கல்வியோடு இசைவாக சகல துறைகளிலும் சிறந்துவிளங்க வேண்டும் என்றும், எந்த ஒரு உயர்வான நிலைக்கு வந்தாலும் கடந்து வந்த பாதையில் ஏணிகளாகவும் படிகளாகவும் திகழ்ந்த பெற்றோரையும், ஆசிரியர்களையும் ஒருபோதும் மறந்தவர்களாக வாழக்கூடாது என்று வலியுறுத்தியதோடு, கடந்த ஆண்டிற்கு முன்னைய ஆண்டு இந்த பாடசாலைக்கு விளையாட்டு விழாவில் கலந்துகொண்டபோது உங்களால் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றியது மிகுந்த சந்தோஷத்தை தந்தது என்றும், பொதுவாக செல்லும் இடங்களுக்கு என்னால் செய்ய கூடியதை அங்கு உறுதியாக சொல்லிவிட்டு அதனை நிறைவேற்றியும் இருக்கிறேன் என்றும் அந்த வகையில் இம்முறையும் தங்களது பாடசாலையின் பெளதீக வள மேம்பாட்டிற்கு ஒரு இலட்சத்து ஐம்பதுனாயிரம் ரூபாவை ஒதுக்கி தருகிறேன் அதற்க்கான வேலைத்திட்டத்தை எனக்கு தாருங்கள் என்று தெரிவித்ததோடு, அக்கிராமத்தின் சில வீதிகளும் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார், அதனைத்தொடர்ந்து உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு மிகவும் சந்தோஷமான செய்தியையும் விடுத்து சென்றார் அந்த செய்தியாவது இந்த பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களை எந்த துறையிலாவது பெற்றால் அவர்களுக்கு தலா ஐம்பதுனாயிரம் வழங்குவேன் ஆகவே முயற்சியோடு கல்வியைத்தொடருங்கள் என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்