சொக்லேட் கொடுத்து சிறுவர்களை கடத்தும் கும்பல்?: பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை

கனடா நாட்டில் சொக்லேட் கொடுத்து சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் ஒன்று சுற்றி திரிவதாக எழுந்துள்ள சந்தேகத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 10 வயது பள்ளி சிறுவன் ஒருவன் சாலையில் நடந்துச் சென்றுள்ளான்.

அப்போது, திடீரென அங்கு வந்த கார் ஒன்று சிறுவன் அருகில் நின்றுள்ளது.

பின்னர், காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் சொக்லேட்டை எடுத்து சிறுவனிடம் நீட்டியுள்ளார். மேலும், காரில் வந்து அமருமாறும் சிறுவனை கேட்டுக்கொண்டுள்ளார்.

நபர் மீது சந்தேகம் அடைந்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி அருகில் சென்றுக்கொண்டு இருந்த நண்பர்கள் குழுவில் இணைந்து வீட்டிற்கு பாதுகாப்பாக சென்றுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது.

புகாரை பெற்ற பொலிசார் சிறுவனை அழைத்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், காரில் வந்த நபர்களின் அடையாளங்களையும், மொழியையும் கேட்டறிந்துள்ளனர்.

பின்னர், சிறுவனிடம் பெற்ற அடையாளங்களை வெளியிட்ட பொலிசார் நகரில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் சுற்றி திரிவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக கண்காணிக்கும்மாறும் குறிப்பிட்ட நபர்களின் அடையாளங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்