கனடாவில் 80சென்ரி மீற்றர்கள் பனி! நம்ப முடியவில்லையா?(photos)

குறிப்பாக ஒரு நகராட்சி வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 85சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவை பெறும்.ஆனால் கடந்த மூன்று நாட்களாக பொழிந்து தள்ளிய 80சென்ரி மீற்றர்கள் பனியை பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில்லிவாக் குடியிருப்பாளர்கள் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் சனிக்கிழமை இரவு வரை 22சென்ரி மீற்றர்கள் பனி பெய்துள்ளது.ஞாயிற்றுகிழமை காலை 8.20 உடன் நம்பமுடியாத ஒரு அளவு-77சென்ரி மீற்றர்கள் பனி அப்பகுதியில் பொழிந்து தள்ளியுள்ளது. மொத்தமாக திங்கள்கிழமை காலையில் 81.2 சென்ரிமீற்றர்களை எட்டிவிட்டதென கூறப்படுகின்றது. வியக்கத்தக்க பனி குவிப்பினை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றது.

இப்பகுதியில் திங்கள்கிழமை மாலைக்குள் மேலும் ஐந்து முதல் 15 சென்ரி மீற்றர்கள் வரை பனி பொழிவு ஏற்படும் என கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது. பிப்ரவரி 9 வியாழக்கிழமை வரை பனி பெய்யும் முன்னறிவிப்பு உள்ளது. இது வரை சில்லிவக் பாடசாலை மாவட்டம் மிசன் மற்றும் அபொட்ஸ்வோர்ட் பகுதி புயல் காரணமாக மூடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்