5 மணிநேரத்தில் வரைந்த ஓவியம் ஜனாதிபதியிடம் கையளிப்பு..

கலைத்துறையில் அதிக ஆர்வத்தினைக் கொண்டுள்ள ஓட்டமாவடி சமீம் படம் வரைதல் மற்றும் வீடியோக்கள் மாற்றியமைத்தல் தயாரித்தல் குறுந்திரைப்படங்கள் எடுத்தல், கவிதை எழுதுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இவர் அண்மையில் ஐந்து மணி நேரத்தில் ஜனாதிபதி மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஆகியோரை வரைந்து அப்படத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

ஏறாவூரில் நடைபெற்ற போதையொழிப்பு மாநாட்டில் வைத்து இப்படம் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இது போன்று பலரின் புகைப்படங்களை அவர்களைப் பார்த்தே வரைந்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்