சசிகலா முதல்வரானால் என்ன நடக்கும்: 20 வருடத்திற்கு முன்பே வெளிவந்த உண்மை

ஒரு நடிகையாக இருந்து தனது சககுருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா தமிழக முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறோம்..

ஆனால், ஜெயலலிதா முதல்வரானதைக் கூட அதிக ஆச்சர்யம் அடைய வேண்டிய விசயமில்லை.

ஏனென்றால், அவர் ஒரு திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைவர்களுடன் போராடி வந்தார்.

ஆனால், இதையெல்லாம், விட ஆச்சர்யமும், அதிர்ச்சி தரக்கூடிய விசயம் ஒன்று உள்ளது.

அது இன்று இல்லையென்றாலும், என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும், அந்த விசயம் என்னவென்றால் சசிகலா முதல்வராவது தான்.

நான் இதை சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம், ஆனால், தனது பலவீனங்களை எல்லாம் பலமாக்கிக் கொண்டு ஜெயலலிதா ஒரு நாள் முதல்வரானது அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார்.

அதற்கான பல பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக் கொள்டு வருகிறார்.

சசிகலா முதல்வராவதற்கு ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்பட்ட நடராஜனே முக்கிய பங்காக இருப்பார்.

அனைத்து துயரங்களையும் சந்தித்து வரும் தமிழக மக்கள் இந்த துயரத்தையும் தாங்கித்தான் ஆகவேண்டும். அப்படி ஒரு நாள் அவர் முதல்வராவார் தமிழக மக்கள் அனைவரும் இன்று நான் கூறியதை நினைத்து பார்ப்பீர்கள்.

இந்த விடயத்தை 20 வருடத்திற்கு முன்பே தாய் என்ற வார இதழில் கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும் என்ற தலைப்பில் எழுத்தாளர் வலம்புரிராஜன் கூறியுள்ளது தற்போது உண்மையாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்