தம் வாழ்வின் இருப்பைத் தக்க வைக்க போராடும் எம் மக்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை குரல் கொடுக்கும்.

தமிழர் தாயகத்தின் இருப்பினை கேள்விக்குரியதாக்கும் நில அபகரிப்பினை பல வழிகளாலும்வெளியுலகத்திற்கு ஆதாரபூர்வமாக கொண்டு வந்து சிறிலங்கா அரசு மௌனமாக நிறைவேற்றிக்கொண்டிருந்த பல திட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை அம்பலப்படுத்தி வந்துள்ளது. இதன்மூலம் தங்கு தடையின்றி நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வந்த தாயக மண் ஆக்கிரமிப்புவேகமெடுக்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீளக்கையளிக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

 

2015 செப்டம்பர் ஐ நா மனித உரிமைக் கழக தீர்மானத்தில் கூட பின்வரும் அம்சங்களை இலங்கைஏற்றுக் கொண்டு நிறைவேற்றியது (co-sponsor):

 

  • கையப்படுத்தப்பட்டநிலங்கள் உரிமையாளர்களிடம் மீளளிப்பதை துரிதப்படுத்தவேண்டும்,
  • நிலப்பயன்பாடு தொடர்பான  பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்,
  • குறிப்பாககுடிசார் நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்,
  • வாழ்வாதாரசெயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,
  • பொதுவாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும்

 

(UNHRC resolution A/HRC/30/L.29 – Also welcomes the initial steps taken to return land, and encourages the Government of Sri Lanka to accelerate the return of land to its rightful civilian owners, and to undertake further efforts to tackle the considerable work that lies ahead in the areas of land use and ownership, in particular the ending of military involvement in civilian activities, the resumption of livelihoods and the restoration of normality to civilian life, and stresses the importance of the full participation of local populations, including representatives of civil society and minorities, in these efforts; )

 

தீர்மானத்தில், நிலம் சம்பத்தப்பட்ட மேற்படி அம்சத்தினை ஐ நா மன்றத்தில் வலுப்படுத்தியதில் பிரித்தானிய தமிழர் பேரவை முக்கிய பங்கெடுத்திருந்தது.

 

சிறிலங்கா அரசு பறித்ததை திருப்பித் தரச் சொல்கின்றார்கள் எம் மக்கள்.  தம் நிலத்திற்கு திரும்பிச்செல்லவும் வாழ்க்கையை மீள ஆரம்பிக்கவும் அவர்கள் கேட்பது எல்லா விதத்திலும் சரியானது. இருப்பதை பறிப்பதல்ல ஒரு நல்லாட்சி அரசு செய்வது, இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான்இன்றைய தேவை.

 

கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு போன்ற கிராம மக்கள் தமது அவல வாழ்க்கையிலிருந்து மீண்டெழப் போராடுவது நியாயமானதே.

 

வட கிழக்கில் வாழும் ஏனைய தமிழ் மக்களும் இதே போல தாம் காலாதி காலமாக வாழ்ந்த ஏனையகிராமங்களிற்கும் திரும்ப வேண்டுமென்கின்றார்கள்.

 

தமிழ் மக்கள் போர் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகியும் தம் சொந்தக் காணிகளுக்கு திரும்ப முடியாவிடில் உலகம் தட்டிக் கேட்க வேண்டும்.

 

போர் முடியும்போது 200,000 இலிருந்து இன்று 4,00,000 ஆக அதிகரிக்கப்பட்ட 99% சிங்களவர்களைக்கொண்டுள்ள பாதுகாப்பு படையினரைப் பற்றி அரசு கொண்டுள்ள அக்கறை அந்த மண்ணுக்குசொந்தக்காரர்களான தமிழ் மக்கள் மீது இல்லை. பாதுகாப்புப் படையினரை வட கிழக்கிலிருந்து அப்புறப்படுத்துவதனூடாகத்தான் அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். காணிகள் அதன் உரித்துடையயவர்களுக்கு கையளிக்கப்பட முடியும், தமது வாழ்வாதாரநடவடிக்ககைகளை ஆரம்பிக்க முடியும், பொது மக்கள் பாதுகாப்பாக இருப்பதாய் உணர்ந்துசனநாயக வழியில் தம் பிரதேசத்தினை கட்டியெழுப்ப முடியும்.

 

பிரித்தானிய தமிழர் பேரவை எதிர்வரும் ஐ நா கூட்டத் தொடரில் இது குறித்த மேலதிக அழுத்தங்களுக்காக குரல் கொடுக்கும்.

 

தம் நிலத்தினை மீட்பதற்காக அமைதி வழியில் போராடும் கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு கிராமமக்களுக்கும் இன்னும் தம் நிலத்திற்கு திருப்ப செல்ல முடியாத ஏனைய கிராம மக்களினதும்நீதியான கோரிக்கைகளுக்கு பிரித்தானியா தமிழர் பேரவை தன முழுமையான தார்மீக ஆதரவினைவழங்குகின்றது. பன்னாட்டு மன்றங்கள் மற்றும் நிறுவனங்களில் இதனை வெளிக் கொண்டுவருவதுடன் தொடர்ச்சியான  செயல்திட்டங்கலில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில்பங்களிக்கும்.

 

அத்துடன் தமிழ் மக்களின் ஜீவாதாரமான இப் பிரச்சினைக்காக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை12/02/17 அன்று 1 மணிக்கு பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக நாடு கடந்த தமிழீழ அரசு(TGTE)ஏற்பாடு செய்துள்ள அமைதிவழி ஆர்ப்பாட்டத்திற்கும் தோழமையுடனான ஆதரவினைபிரித்தானிய தமிழர் பேரவை (BTF) வழங்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்