மார்க்கம் குடியிருப்பு தெருவில் மனிதன் கொடூரமாக சுட்டு கொலை!

ரொறொன்ரோ- வெள்ளிக்கிழமை அதிகாலை 20வயது மதிக்கத்தக்க மனிதரொருவர் குடியிருப்பு தெருவில் கொடூரமான முறையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஹில்வூட் வீதி அருகே ஸ்ரோன்பிரிட்ஜ் டிரைவ் மற்றும் காஸ்ரல்மோர் அவெனியு அண்மையில் பாதையோர நடைபாதையில் அதிகாலை 1-மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு பல துப்பாக்கி சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அரை-இயங்கி தானியங்கி துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டு தடங்கள் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரோ அல்லது சந்தேக நபர்களோ சம்பவ இடத்திலிருந்து வாகனமொன்றில் ஓடிவிட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தை கண்டவர்கள் முன்வந்து பொலிசாரின் விசாரனைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்