அத்லான்டிக் கனடாவை நோக்கி ஆபத்தான பனிப்புயல்!

அத்லான்டிக் கனடாவின் பெரும்பகுதியை ஆபத்தான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்படுகின்றது. மக்களை முடிந்த வரை-நியு பிறவுன்ஸ்விக்-உட்பட-வீதிகளிலிருந்து விலகி இருக்குமாறு கூறப்படுகின்றது. நியு பிறவுன்ஸ்விக்கின் சகல பகுதிகளிலும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ஒரு சாத்தியமான வாழ்க்கை நிலையை அச்சுறுத்தும் பனிப்புயலாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. மாலை மற்றும் இரவு அட்லான்டிக் கரையோர பகுதிகளை அண்ட வேண்டாம் எனவும் கூறப்படுகின்றது. வெள்ளமும் ஏற்படலாம். நோவ ஸ்கோசியாவும் ஸ்தம்பித்துள்ளது.

பாடசாலைகள், வர்த்தகங்கள், காரியாலயங்கள், போக்குவரத்து சேவைகள், சில சுகாதார பராமரிப்பு சேவைகள் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஆக கூடியது 70சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவுடன் காற்றின் வேகமும் மணித்தியாலத்திற்கு 110-கிலோமீற்றர்கள் வேகத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாணத்தின் மேற்கு பாகத்தில் 40 முதல்70 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவு காணப்படும். புயல் ஏற்படலாம் என கருதுவதால் பிரின்ஸ் எட்வேட் பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டன. நியு பவுன்லாந் மற்றும் லபரடோர் பகுதியில் செவ்வாய்கிழமை பனிபொழிவு ஏற்படலாம். நியு பிறவுன்ஸ்விக் பல்கலைக்கழகம், சென். தோமஸ் பல்கலைக்கழகம், மவுன்ட் அலிசன் பல்கலைக்கழகம், மொன்ங்ரன் பல்கலைக்கழகம் ஆகியன மூடப்பட்டன. பலமான காற்று மாகாணத்தை சுற்றி மேலதிக பிரச்சனைகளை உருவாக்குகின்றன என கூறப்படுகின்றது.

சூறாவளி போன்ற கொடிய காற்று நோவ ஸ்கோசியா பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 120-கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தடையும் ஏற்பட்டுள்ளது. வீதிகளில் பனி காரணமாக வழுக்கல் தன்மை காணப்படுகின்றது. முடிந்த வரை பயணங்களை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை புயல் காரணமாக இரு மரணங்களும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் தொகை 40ஆகவும் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்