கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இலண்டனிலும் கவனயீர்ப்பு! (photo)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பில் காய்ந்து கருகி இடைவிடாது போராடி வருகின்ற மக்களுக்கு ஆதரவாக, இலண்டனிலும் நேற்றுமுன்தினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள், விமானப் படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தங்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் 31ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். விமானப்படையினர் முகாம் முன்பாகவே கூடாரமிட்டு அமர்ந்திருந்து, படுத்துறங்கி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு ஆதரவாக தாயக தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆதரவுப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் இலண்டனில், புலம்பெயர் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டனின் தலைமை அமைச்சர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், பிற்பகல் ஒரு மணியிலிருந்து 4 மணி வரை (இலண்டன் நேரம்) இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெருமளவானோர் கலந்துகொண்டனர். கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களுக்காக, அவர்களது காணி விடுவிப்புக்காக கோஷம் எழுப்பினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்