உச்சி வகிர்ந்தெடுத்து!!

உச்சநீதி மன்றத்திலே…
மச்சி ஊழல் மாட்டுப் பட,
மிச்சமுள்ள 4 ஆண்டு
ஜெயிலில் என்று சொன்னாங்க.
சி எம் ஆக இருந்ததெல்லாம் மாயம் ஆச்சு கண்ணம்மா!

அம்மாவ போட்டு விட்டு
பன்னீர பணிய வைத்து
சும்மாவே சி எம் ஆகப் பார்த்தாக.
நடராஜா கட்சி விட்டு
நட  ராஜா
அடி சதி செய்தோர் முடிவில அழிவில.

சீ டி சுமந்து சென்று
சிநேகமாக ஆன பின்னால்
கோடியில் சொத்துத் சேர்த்து வாழ்ந்தாக.
மன்னார்க்குடி எண்ணியது மண்ணாப் போச்சு – இந்தப்
பன்னீர் செல்வம்
பக்குவமாய் ஆள வேண்டும்.

உச்சநீதி மன்றத்திலே…
மச்சி ஊழல் மாட்டுப் பட,
மிச்சமுள்ள காலமெல்லாம்
ஜெயிலில் என்று சொன்னாங்க.
சி எம் ஆக இருந்ததெல்லாம் மாயம் ஆச்சு கண்ணம்மா!

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்