முடக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோக்களை லாக்இன் செய்யாமல் பார்ப்பது எப்படி?

இண்டர்நெட்டில் வீடியோக்களை பார்க்க சிறந்த தளமாக யூடியூப் இருக்கிறது. பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வீடியோக்கள் இலவசமாக காண கிடைக்கும் யூடியூப் தளத்தில் அவ்வப்போது சில வீடியோக்கள் முடக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான்.

யூடியூபில் வீடியோக்கள் முடக்கப்படுவதற்கு ஒவ்வரு நாட்டின் சட்டத் திருத்தங்களுக்கு உட்பட்ட காரணங்கள் ஏராளமாய் இருக்கின்றன. இவற்றில் சில வீடியோக்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரி மூலம் வெரிஃபை செய்த பின் பார்க்க வழி செய்யும். சில சமயங்களில் வீடியோக்களை மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம்.

அவ்வாறான சமயங்களில் மின்னஞ்சல் முகவரி மூலம் லாக் இன் செய்யாமலேயே வீடியோக்களை பார்ப்பது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

முதலில் முடக்கப்பட்டுள்ள வீடியோக்களின் யூஆர்எல்-ஐ மாற்றியமைக்கலாம். இதில் யூஆர்எல்-இல் watch? என்ற எழுத்தை அழித்து பின் ‘=’ with ‘/’. என டைப் செய்து என்டர் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் வீடியோவினை பார்க்க முடியும்.

யூடியூப் வீடியோவினை ஓபன் செய்ததும் யூஆர்எல்-இல் ‘nsfw’ என டைப் செய்ய வேண்டும். அதாவது www. மற்றும் youtube வார்த்தைகளுக்கு இடையில் ‘nsfw’ என டைப் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்த பின் யூஆர்எல் இப்படி இருக்க வேண்டும். www.nsfwyoutube.com/

தேர்வு செய்த வீடியோவின் யூஆர்எல்-இல் www. மற்றும் youtube வார்த்தைகளுக்கு இடையே ‘pwn’ என டைப் செய்ய வேண்டும்.
முன்பு வழங்கப்பட்டிருந்த மற்ற வழிமுறைகளை போன்று இல்லாமல், யூடியூப் யூஆர்எல்-இன் முகவரியில் ‘repeat’ என டைப் செய்து என்டர் பட்டன் கிளிக் செய்தால் இதே வீடியோ யூடியூப் அல்லாமல் கிடைக்கும் மற்ற தளங்களுக்கு எடுத்துச் செல்லும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்