கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

அதிகரிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தின் காரணமாக கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் குடிவரவாளர்களது எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக குடிவரவு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 56,446 ஆகும். இதே காலப்பகுதியில் 2015 ஆம் ஆண்டில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையான 111,993 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 50% குறைவானதாகும்..
ஓய்வுபெற்ற குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர்-நாயகம் Andrew Griffith அவர்களால் கனேடிய செனட் சபையின், சமூக அலுவல்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பக் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்படும் பொருட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றிலேயே இத்தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்குழு குடிவரவுச் சட்டமூலத்திற்கான உத்தேச திருத்தங்கள் (Bill C-6) தொடர்பான தனது விசாரணைகளை இவ்வாரம் ஆரம்ம்பிக்கின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்