கேப்பாப்பிலவுப் போராட்டம் முன்னுதாரணமாக அமையும்! – சரவணபவன் எம்.பி. தெரிவிப்பு (photo)

“கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் அறவழிப் போராட்டம் முன்னுதாரணமானது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
விமானப் படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரசரவணபவன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். இவற்றைப் போன்று பல காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அவற்றை விடுவிப்பதற்கு இந்த மக்களின் போராட்டம் முன்னுதாரணமாக அமையும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்