எல்லை நிர்ணய அறிக்கை இன்று வர்த்தமானியில்! – வெளியிடப்படும் என்கிறார் அமைச்சர் முஸ்தப்பா

நீண்ட சர்ச்சையையும் – பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த, உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை வர்த்தமானியில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி சபைகளின்  எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த அசோகப் பீரிஸ் தலைமையிலானகுழு ஜனவரி 17 ஆம் திகதி எல்லை நிர்ணய அறிக்கையை அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவிடம் கையளித்திருந்தது. ஒரு வருட காலமாக பெரிய இழுபறிக்கு மத்தியில் காணப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான  பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அறிக்கை கையளிக்கப்பட்டது.
“மேற்படி அறிக்கை வர்தமானியில் இன்று வெள்ளிக்கிழமை  வெளியிடப்படவுள்ளது. அறிக்கையை தயாரித்து வர்த்தமானியில் வெளியிட தேர்தல் ஆணையகம் பெரிய ஒத்துழைப்பை வழங்கியது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ செய்த முறையற்ற எல்லை நிர்ணயம் காரணமாகவே எல்லை நிர்ணய விவகாரம் பூதாகரமான பிரச்சினையாக கடந்த காலத்தில் தோற்றம் பெற்றது” என்றார் அமைச்சர் பைசர் முஸ்தப்பா.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்