மாபெரும் கூட்டணியுடனே உள்ளூராட்சி தேர்தலில் சு.க. களமிறங்கும்! –  அமைச்சர் டிலான் கூறுகின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாபெரும் கூட்டணியை அமைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி களமிறங்கும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
 2020இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசை அமைக்கும் நோக்குடனேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாபெரும் கூட்டணியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி களமிறங்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்