‘தனிப்பட்ட சிலரின் இலாபத்துக்காக எம்மை அலைக்கழித்தனர்’ – இலங்கை அணியினர் புகார்.

அவுஸ்திரேலியா நாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அலைக்கழித்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள் என சர்சைக்குரிய புகார் எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டையும் இழந்தது.

குறித்த இந்த சுற்றுப்பயணம் முடிந்து சில தினங்களிலேயே அவுஸ்திரேலியாவில் இலங்கை அணிக்கு போட்டியுள்ளதால் இலங்கை வீரர்கள் இலங்கைக்கு திரும்பாமல், தென் ஆப்பிரிக்காவிலிருந்தே அவுஸ்திரேலியா புறப்பட்டார்கள்.

தென் ஆப்பிரிக்காவின் Johannesburgலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு நேரடி விமானம் உள்ளது, இதில் பயணித்தால் 12 மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம்.

ஆனால் இலங்கை வீரர்கள் Johannesburgலிருந்து ஹாங்காங்குக்கு 12 மணிநேர பயணமும், பிறகு அங்கிருந்து சிட்னிக்கு 9 மணிநேரம் பயணம் செய்யப்பட்டு அவுஸ்திரேலியா வந்தடைந்தார்கள்.

இப்படி அலைச்சல் மற்றும் நேர விரயம் ஏற்படுத்தியது எதற்காக என இலங்கை வீரர்கள் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தனிப்பட்ட சிலரின் இலாபத்துக்காக இப்படி செய்யப்பட்டதா என விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை வீரர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்