நள்ளிரவில் முளைத்த போஸ்டரால் பரபரப்பு!

தமிழகத்தில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். குறிப்பாக ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகின்றனர்.

திருப்பூர், மதுரை போன்ற பகுதிகளில் இத்தகைய போஸ்டர்கள் அடிக்கடி முளைப்பதுண்டு. சில மாதங்களுக்கு முன் சென்னை கோட்டையில் முதல்வராக ரஜினி இருப்பது போன்ற போஸ்டர்களை சில ரசிகர்கள் அடித்திருந்தனர்.

இப்போது பெரும் அரசியல் குழப்பத்துக்கு நடுவில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக அவரது ரசிகர்கள் சென்னையில் புதிய போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.

நேற்று நள்ளிரவு அண்ணாசாலை முழுவதிலும் இந்த போஸ்டர்களை ஒட்டினார்கள். அந்த போஸ்டரில் ‘மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ ,’NEXT நீங்க CM ஆனா BEST’ என்ற வாசகங்களுடன் பின்புறம் தலைமைச்செயலகத்தின் படமும், ஆளுயர ரஜினி படத்தையும் வைத்து அமைத்திருந்தார்கள்.

நள்ளிரவு நேரத்திலும், வழியில் செல்வோர் இந்தப் போஸ்டரை நின்று பார்த்துவிட்டுச் சென்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்