நோக்கியா P1 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன்களும் சில பீச்சர்போன்களும் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நோக்கியா 3310 பீச்சர்போன் மற்றும் நோக்கியா 5, நோக்கியா 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா P1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் நோக்கியா P1 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

மெட்டல் வடிவமைப்பு:

நோக்கியா P1 ஸ்மார்ட்போன் சார்ந்த கான்செப்ட் வீடியோக்களில், இந்த ஸ்மார்ட்போனில் மெட்டல் ஃபிரேம் சார்ந்த வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது. இத்துடன் ஹோம் பட்டனில் இணைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ரோஸ் கோல்டு, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

உயர் ரக ஸ்மார்ட்போன்:

நோக்கியா P1 ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் டிஸ்ப்ளே FHD 1080 பிக்சல் அல்லது QHD 1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கப்படலாம். இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128 / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரோ கேமரா:

நோக்கியா P1 ஸ்மார்ட்போனில் 22.3 எம்பி Carl Zeiss பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் IP57 மூலம் தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொத்த சிறப்பம்சங்களையும் சக்தியூட்ட 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அம்சங்கள்:

நோக்கியா P1 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவற்றின் விலையை பொருத்த வரை 128 ஜிபி மாடல் ரூ. 54,500 மற்றும் 256ஜிபி மாடல் ரூ.64,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா P1 ஸ்மார்ட்போனும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் போது பிப்ரவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்