மன்னார் பிரஜைகள் குழு தலைமையில் விசேட குழு கேப்பாப்பிலவிற்கு விஜயம்.

 

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னர் பிரஜகள் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர் அந்தோனி சகாயம்,அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் உற்பட மன்னாரில் இருந்து விசேட குழு கேப்பாப்பிலவுக்கு சென்றனர்.

அங்கு சென்ற குழுவின் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி பதாதைகளை ஏந்தி கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

பின்னர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை குறித்த குழுவினர் சந்தித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்