வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம , திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாதிப்பு

வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம , திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு ) முன்பாக 100 மீற்றர் தொலைவில் திண்ம மற்றும் திரவக்கழிவுகளை வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபையினரும்  கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதாகவும் சிறுவர்கள் , குழங்தைகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள்  சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட் பதியுதின் , வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார , வவுனியா நகரசபை செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர் , வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் , வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் என  பலரும் இன்று (17.02.2017)  விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
குப்பைகளை துர்நாற்றம் வீசாமல் , சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி அகற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குறிய நடிவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட் பதியுதின் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்