நியூசிலாந்தை 78 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்று நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் ரன்ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் டக்அவுட் ஆனார். ஆனால் அம்லா சிறப்பாக விளையாடி 43 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 62 ரன்கள் குவித்தார். அதன்பின் வந்த கேப்டன் டு பிளிசிஸ் 36 ரன்னும், டி வில்லியர்ஸ் 26 ரன்னும், டுமினி 29 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 14.5 ஓவரில் 107 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து சரணடைந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும், பெலுக்வாயோ 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய இம்ரான தாஹிர் ஆட்டம் நாயகன் விருது பெற்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்