11வது பரிசளிப்பு விழா தொடர்பாக பிரதேச பள்ளிவாயல் நிருவாகத்தினருடனான விஷேட சந்திப்பு

 

பிரதேச பள்ளி வாயல்களின் நிருவாக சபை மற்றும் பாடசாலையின் பழைய மாணவ சங்க நிருவாகிகளுக்கிடையிலான விஷேட சந்திப்பு இரவு 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின் மீரா ஜூம்ஆப்பள்ளிவாயளில் இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போது பழைய மாணவ சங்கத்தினால் முன்னொடுக்கப்பட்டுவரும் 11வது பரிசளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தல் அதனை சிறப்பாக நடாத்துவதற்காக வேண்டி பள்ளி வாயல் நிருவாக சபையின் ஒத்துழைப்பினை பெறல் என்ற தொனிப்பொருளில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருத்தது.

மேலும் எதிர்காலத்தில் பழைய மாணவர்களினால் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்றிட்டங்கள் குறிந்தும் கட்டார் போன்ற வெளிநாடுகளில் இருக்கும் பழைய மாணவர்கள் இப்பரிசளிப்பு விழாவுக்காகவும் பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் அவர்களினால் வழங்கப்படும் ஒத்துழைப்புக்கள் உதவிகள் குறிந்தும் பழைய மாணவ சங்க செயலாளர் அஸ்ஹர் அவர்களினால் ஞாபகம் மூட்டப்பட்டது.

இதன் போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன இச்சந்திப்பில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ரீ.சலாஹூத்தீன் உள்ளிட்ட பள்ளிவாயல் தலைவர்கள் நிருவாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எம்.ரீ.எம்.பாாிஸ்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்