காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்பாக நிறைவு !!!

காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது கடந்த வருடம் முதன் முறையாக ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து இவ்வருடம் இரண்டாவது முறையாக நடைபெற்றது.அதன் இறுதிநாள் நிகழ்வு இன்று(11) காரைதீவு கனகரட்ணம் மைதானத்தில் கோலாகலமாக ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்வானது கல்லூரி அதிபர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றதுடன்,மாகாணசபை உறுப்பினர் கலையரசன் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார்.மேலும் சிறப்பதிதிகள் ,கௌரவ அதிதிகள் ,விசேட அதிதிகள் வரிசையில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் போட்டியில் தாகூர்மணி இல்லம்(மஞ்சள்) 175 புள்ளிகளுடன் முதலிடத்தையும்,சாராதாமணி இல்லம்(பச்சை) 152 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும்,காதம்பரி இல்லம்(நீலம்) 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

செய்தியாளர்கள்-கபிலன்,நிதுஸ்,காந்தன்

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்