ஆண்களே !ஆண்மை இல்லையே என இனி அலட்டிக்க வேண்டாம் அதுக்கான ஆயிட்டம் உள்ள இருக்கு-வாசியுங்கள் புரியும் !!

ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள்- ஓர் ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரை!

ஒவ்வொரு ஆணும் தங்களது பாலுணர்ச்சியை அதிகரித்துக் கொள்ள நினைப்பார்கள்.

அதுமட்டுமின்றி படுக்கையில் துணையை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டுமென்றும் விரும்புவார்கள்.

ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பாலுணர்ச்சியைக் குறைத்து, படுக்கையில் உல்லாசமாக இருப்பதில் இடையூறை ஏற்படுத்தும்.

மேலும் இவை அப்படியே நீடித்தால், அதனால் நாளடைவில் கருவளம் பாதிக்கப்பட்டு, குழந்தையைப் பெற்றெடுப்பதில் பெரும் சிக்கலை உண்டாக்கிவிடும்.

எனவே பாலுணர்ச்சி குறைவது போல் இருந்தால், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

அதற்கு உணவுகள் நல்ல பலனைத் தருவதாக ஊட்டச்சத்து நிபுணரான முக்தா அகர்வால் கூறுகிறார்.

கீழே ஊட்டச்சத்து நிபுணர் முக்தா அகர்வால் பரிந்துரைத்த வயாகரா போன்று செயல்படும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை ஆண்கள் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், பாலுணர்வு குறைவதைத் தடுக்கலாம்.

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் போன்ற பாலுணர்ச்சியின் மேம்பாட்டிற்குத் தேவையானவை உள்ளன.

குறிப்பாக செக்ஸ் ஹார்மோனை வெளியிட உதவும் வைட்டமின் பி6 இப்பழத்தில் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம் புரோட்டீன்களின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடலின் உறுதி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.

எனவே ஆண்கள் அவகேடோ பழத்தைக் கொண்டு செய்யப்படும் மில்க் ஷேக்கை அடிக்கடி குடித்து வந்தால், பாலியல் வாழ்க்கை மேம்படும்.

பாதாம்

பாதாமில் ஆண்களின் முக்கிய செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஒமேகா-3 வளமாக உள்ளது. மேலும் வைட்டமின் ஈ, வைட்டமின் பி2, மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது.

பெண்கள் பாதாமை உட்கொண்டு வந்தால், அதன் மணம் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே பாதாமை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள்.

பூண்டு

ஆயுர்வேதத்தில் பூண்டு பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பூண்டு ஆண் இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, உடல் உறுதி மற்றும் ஆற்றலை அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும்.

ஆகவே பாலுணர்ச்சியை அதிகரிக்கவும், பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கவும் தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வாருங்கள் அல்லது அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

சாக்லேட்

சாக்லேட்டில் உள்ள கொக்கோ என்னும் கெமிக்கல், பாலுணர்ச்சியைத் தூண்டக்கூடியது. மேலும் சாக்லேட்டில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், பாலியல் பிரச்சனைகள் வராமல் இருக்கும் எனவே தினமும் ஒரு துண்டு சாக்லேட்டை உட்கொண்டு, பாலியல் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பூசணிக்காய் விதை

பூசணிக்காய் விதை ஆண், பெண் என இருபாலரின் கருவளத்தையும் மேம்படுத்தக்கூடியது. இந்த விதையில் வைட்டமின் சி, பி, டி, ஈ மற்றும் கே உடன், ஜிங்க், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பாலுணர்ச்சியை மேம்படுத்தும் சத்துக்களும் உள்ளது.

எனவே ஆண்களே நீங்கள் உண்ணும் சாலட் மற்றும் சாண்விட்ச்சுகளில் பூசணி விதைகளைத் தூவி உட்கொண்டு, பாலுணர்வை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

தர்பூசணி

ஆராய்ச்சிகளில் தர்பூசணி ஒரு பாலுணர்வைத் தூண்டும் நேச்சுரல் வயாகரா என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு இதில் உள்ள அமினோ அமிலமான சிட்ருலின் தான் முக்கிய காரணம். இது தான் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, படுக்கையில் சிறப்பாக செயலாற்றச் செய்கிறது.

ஆகவே படுக்கையில் துணையுடன் குதூகலமாக இருக்கும் முன், ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸ் குடித்துவிட்டு செல்லுங்கள்.

இஞ்சி

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சி, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் வெப்பநிலையைத் தூண்டி, பாலுணர்ச்சியை மேம்படச் செய்யும். ஆகவே படுக்கும் முன் ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, படுக்கையில் சிறப்பாக விளையாடுங்கள்.

அத்திப்பழம்

ஏராளமான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அத்திப் பழம், பாலியல் பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. இதற்கு அத்திப் பழத்தில் உள்ள அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்றவை தான் காரணம். ஆகவே இப்பழம் கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிட்டு பயன் பெறுங்கள்.

முட்டை

புரோட்டீன்க்ள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையை ஆண்கள் தினமும் உட்கொண்டு வந்தால், ஹார்மோன்கள் சீராக இருப்பதோடு, உடலும் ரிலாக்ஸாக, அழுத்தமின்றி இருக்கும்.

உடலினுள் அழுத்தம் அதிகம் இருந்தால் தான் பாலுணர்ச்சி குறையும். ஆனால் முட்டை உடனடி ஆற்றலை வழங்குவதால், தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், படுக்கையில் குதூகலமாக இருக்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்