பேஸ்புக் கமெண்ட்ஸ்-இல் புதிய வசதி விரைவில் அறிமுகமாகிறது.

பேஸ்புக்கில் உங்களது நண்பர்களின் போஸ்ட்களில் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை தெரிவிக்க வழி செய்யும் கமெண்ட்ஸ் வசதி பற்றி அனைவரும் அறிந்ததே. பேஸ்புக் கமெண்ட்ஸ் பலருக்கும் நல்ல பொழுதுபோக்காக இருக்கும் நிலையில் கமெண்ட்ஸ் பகுதியில் புதிய வசதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேஸ்புக் கமெண்ட்ஸ் பகுதியில் விரைவில் ஜிஃப் பட்டன் வழங்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. இதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ஜிஃப் பட்டன் பயன்படுத்தி கமெண்ட்ஸ் பகுதியில் ஜிஃப் பைல்களை போஸ்ட் செய்ய முடியும்.

பேஸ்புக் போஸ்ட் கமெண்ட்ஸ்-இல் வாடிக்கையாளர்களுக்கு ஜிஃப் பட்டன் வழங்கும் வசதி குறித்து இணையதளம் ஒன்று மின்னஞ்சல் மூலம் எழுப்பிய கேள்விக்கு பேஸ்புக் பதில் அளித்து ஜிஃப் பட்டன் வசதி வழங்குவதை உறுதி செய்துள்ளது.

பேஸ்புக் கமெண்ட்ஸ்-இல் ஜிஃப் பட்டன் வழங்கும் வசதி முதற்கட்டமாக சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு சோதனை செய்யப்படும். சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் விரைவில் இந்த வசதி அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்