யாழ்.நாவாந்துறை குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திருவிழா.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை குருசடித்தீவு என அழைக்கப்படும் சிறுத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று (26.03.2017) குருமுதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கச்சதீவு, பாலைதீவு, இரணை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாக்களை அடுத்து குருசடித்தீவு ஆலய திருவிழாவிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டனர். யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் இருந்து விசேட படகுச் சேவைகளும் இடம்பெற்றன. தவக்கால யாத்திரை சிறப்புற அமைய ஆலோசனைகளையும் வழிநடத்தலையும் வழங்கிய அருட்தந்தை அன்ரனி பாலா உட்பட அருட்தந்தை ஜெபன், அருட்தந்தை சசீஸ்குமார், அருட்தந்தை வினோஜன் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

படங்கள், வீடியோ – ஐ.சிவசாந்தன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்