நகர பிதா (மேயர்) ஜான் டோரி மற்றும் நகர சபை உறுப்பினர் (கவுன்சிலர்) நீதன் சண்

நகர பிதா (மேயர்) ஜான் டோரி மற்றும் நகர சபை உறுப்பினர் (கவுன்சிலர்) நீதன் சண் இலங்கை வட மாகாணப் பயணம் பற்றிய கலந்துரையாடல்

நகர பிதா (மேயர்) ஜான் டோரி மற்றும் நகர சபை உறுப்பினர் (கவுன்சிலர்) நீதன் சண், தங்கள் இலங்கை வட மாகாணப் பயணம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை தமிழ் கனடிய சமூகத்துடன் நிகழ்த்தவுள்ளனர். இந்நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 7, 2017 மாலை 6:30க்கு
இடம்: ஸ்கார்பரோ சிவிக் சென்டர்
Scarborough Civic Centre
150 Borough Drive

இவர்களின் பயணத்தின்போது, முல்லைத்தீவு சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற அஞ்சலி, காணாமலப் போனோரின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்பு, மற்றும் இறுதியாக யாழ் பொதுநூலகத்தில், டொரண்டோ மற்றும் யாழ் மாவட்டத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் வெள்ளிக்கிழமை கலந்துரையாடலின்போது:
– நகர பிதா (மேயர்) ஜான் டோரி மற்றும் நகர சபை உறுப்பினர் (கவுன்சிலர்) நீதன் சணின் பயண விபரங்கள்
– சமூக உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கருத்துக்கள் பற்றிய தகவல்கள் பரிமாற்றம்
– டொரண்டோ மற்றும் யாழ் மாவட்டத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவரங்கள்
– இவ் ஒப்பந்தம் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள்
– புரிந்துணர்வு ஒப்பந்தமும் கனேடிய தமிழர்களின் முக்கியப் பங்கும்
போன்ற கருத்துக்கள் கலந்தாலோசிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கும் மற்றும் முன்கூட்டிய பெயர் பதிவுகளும் (RSVP) councillor_shan@toronto.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 416 392 4078 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் எங்களுடன் தெடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.

நகர சபை உறுப்பினர் (கவுன்சிலர்)
நீதன் சண்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்