பிறிமா நடன பள்ளியின் 6 வது வருடாந்த நிகழ்வு.(photos)

பிறிமா நடன பள்ளியின் 6 வது வருடாந்த நிகழ்வு மிகவும் பிரமாண்டமாகவும் மண்டபம் நிறைந்த நிகழ்வாகவும் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் சிறியவர்கள் பெரியவர்கள் என பலதரப்பட்ட வயதினர் தமது திறமைகளை மிகவும் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள். நமது குழந்தைகளை கௌரவித்து அவர்களை limousine வாகனத்தில் வரவழைத்து மேளதாளத்துடன் மண்டபத்திற்குள் அழைத்து வந்ததும் அனவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தது அனைவரது மனதையும் நெகிழ வைத்தது.
இப்படி ஒரு கௌரவத்தை கொடுத்த Prima Dance School நிறுனத்திற்கு மனமார்ந்த நன்றி. “அதிபர் கூறினார் நம்ம குழந்தைகளை நாம் கௌரவப்படுத்தாமல் வேறு யார் கௌரவப்படுத்துவார்கள் ” அத்தனை சிறுவர்களையும் பயிற்றுவித்து அவர்களை மேடை ஏற்றிய பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் அவர்களின் கட்டளைகளை ஏற்று தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்த நமது சிறுவர்களை எண்ணி பெருமைப்படுகின்றோம். குழந்தைகளின் பெற்றோரின் பங்களிப்பு அவர்களின் நடனங்கள் பாராட்டத்தக்கது.
 இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட அசோக் மாஸ்டர், சன்டி மாஸ்டர், மற்றும் பிங்கில் ஆகியோரின் வரவு நமது சிறுவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அவர்களின் வழி நடத்தலில் நமது சிறுவர்கள் மண்டபத்தையே அதிர வைத்த இந்த நிகழ்வை அழகாகவும் நகைச்சுவை கலந்தும் ஒழுங்காகவும் தகுந்த நேரத்திற்கு தொகுத்து வழங்கி நிறைவிற்கு கொண்டுவந்த பிரணவன் நிதா இருவரின் கடுமையான உழைப்பும் பாராட்டத் தக்கது.  இவ் நிறுவனம் மேன்மேலும் பல் கிளைகளை தொட்டு நமக்கு பல நடனக் கலைஞர்களை உருவாக்கித்தரவேண்டும் என்று மனமார வாழ்த்தும் tamilcnn குடும்பம்.
செய்தி, நிழற்படங்கள்
சுகந்தி ராஜன்
os)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்