கனடிய பிரதமர் ஐஸ்டின் ரூடோ சித்திரை புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .

கனடிய பிரதமர் ஐஸ்டின் ரூடோ அவர்கள் இன்றைய தமிழ் சித்திரை புத்தாண்டு முன்னிட்டு கனடிய மற்றும் உலக தமிழர்களுக்கு தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார் . தனது வாழ்த்து செய்தியில், இன்று கனடா மற்றும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் புத்தாண்டினை வரவேற்கிறார்கள் . இந்நாளில் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஒன்றாக கோவில் வழிபாடுகள் செய்தும் ஒன்றாக இணைந்து மகிழ்வுடன் உணவு அருந்தியும் வரவிருக்கும் நாட்கள் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.

150வது ஒன்றினைந்த வருடத்தில் எமது நாட்டின் தனித்துவம் மிக்கதும் எம்மை வலுவான தேசமாக மாற்றும் பல்லின மக்களின் பங்களிப்பை கௌரவித்து நினைவு கூறுவோம். கனடியத் தமிழர் தம் பங்களிப்புடனும் தான் எம் தேசம் பலமடைந்த்து என நி னைவு கூறுவோம்.

இந்நாளில் மகிழ்வான, ஆரோக்கியமான சமாதானத்துடன் கூடிய புத்தாண்டு விழா கொண்டாடும் அனைவருக்கும் கனடிய அரசு சார்பில் நானும் என் குடும்பமும் இனிய புது வருட வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்எ ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்