கனடிய பிரதமரின் அழகை பாராட்டிய மலாலா-மகிழ்ச்சியில் நாடாளுமன்றம்

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானியரான மலாலா யூசப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கி சிறப்பித்துள்ளது.

குடிமகள் தகுதியை பெற்றுக்கொண்ட மலாலா, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

கனடிய நாடாளுமன்றத்தில் பேசிய மலாலா, அகதிகளுக்கு வரவேற்பு அளிக்கும் கனடிய பிரதமரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது.

அகதிகள் மற்றும் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் கனடாவின் குடியேற்ற கொள்கை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்த மலாலா கனடிய பிரதமரை பற்றி பேசிய போது, ஒட்டுமொத்த நாடாளுமன்றமே சிரிப்பலையில் மூழ்கியது.
கனடிய பிரதமரை சந்தித்ததில் எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. கனடிய வரலாற்றில் அவர் இரண்டாவது இளம் வயது பிரதமர் ஆவார்.

இவர் எப்படி இவ்வாறு இளமையாக இருக்கிறார் என்று மக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு காரணம், இவர் யோகா செய்கிறார், கையில் டாட்டூ போட்டுக்கொள்கிறார் என்று மலாலா கூறியபோது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கரகோஷம் எழுப்பி சத்தமாக சிரித்துள்ளனர்.

இருப்பினும், தனது பேச்சை நிறுத்தாத மலாலா, நான் கனடிய பிரதமரை சந்திக்கிறேன் என்ற செய்தி வெளியானபோது, என்னை சுற்றியிருப்பவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?

கனடிய பிரதமருடன் கைகுலுக்க மறந்துவிடாதே, அவர் நேரில் எப்படி இருக்கிறார் என்பதை எங்களிடம் கூறு என தெரிவித்தனர்.

கனடிய பிரதமருடான சந்திப்பு குறித்து அறிந்துகொள்வதில் அவர்கள் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என கூறி நாடாளுமன்றத்தையே கலகலப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கனடாவின் கௌரவ குடிமக்கள் தகுதியைப் பெறும் ஆறாவது நபராவார் மலாலா.

இதற்கு முன்னர் அத்தகைய தகுதியை பெற்றவர்களில் நெல்சன் மண்டேலாவும், தலாய் லாமாவும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்