ஹொரவ்பொத்தானை-றத்மலை புதிய தக்கிய பள்ளி வாசல் திறப்பு விழா

ஹொரவ்பொத்தானை-றத்மலை புதிய தக்கிய பள்ளி வாசல் திறப்பு விழா கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுத்தினால் நேற்று (17)திறந்து வைக்கப்ட்டது.

ஜவேளை தொழுகைகளையும் தொழுவதற்காக கடவத பகுதியிலுள்ள மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச்சென்று தமது சமய வழிபாட்டினை மேற்கொள்வதாக அமைச்சருக்கு தெரியப்படுத்தியதையடுத்து கட்டார் தனவந்தரொருவரின் உதவியினால் இப்பள்ளி வாசல் கட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இப்பள்ளி வாசல் திறப்பு விழாவின் போது முதலாம் ஆண்டு தொடக்கம் ஜந்தாம் ஆண்டு வரை கல்வியைத்தொடரும் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் தனவந்தவர் அஹமட் அவரது மகன் அனுராதபுரம் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான்,திருகோணமலை மாவட்ட பாராள மன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,மற்றும் பிரதேச அரசியல்வாதிகள்,கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(அப்துல்சலாம் யாசீம்-)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்