ஒலிம்பிக் சம்பியனை வீழ்த்தினார் இலங்கை வீரர்

உலகின் இரண்­டா­வது வேக­மான குறுந்­தூர ஓட்ட வீர ரான ஜமைக்காவின் யொஹா­ன்ப்ளேக்கை இலங்கை வீர­ரான ஹிமேஷ எஷான் தோல்­வி­ய­டையச் செய்­துள்ளார்.

 

ஜமைக்­காவில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற விருந்­தினர் தட­கள போட்­டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் கலந்து கொண்டே ஹிமேஷ இந்த வெற்­றியைப் பெற்­றுள்ளார்.

எட்டுப் பேர் கலந்து கொண்ட போட்­டியில் ஹிமே­ஷ­வுக்கு ஆறா­வது இடம்­ கி­டைத்­துள்­ளது. இந்த வரு­டத்தில் தனது சிறந்த ஓட்ட நேர­மான 10.29 வினாடிகளில் போட்­டியை நிறைவு செய்­துள்ளார்.

ஆனால் உலகின் இரண்­டா­வது வேக­மான வீர­ருக்கு இறுதி இடமே கிடைத்­துள்­ளது. அவர் 10.88 வினாடிகளில் போட்­டியை நிறைவு செய்­துள்ளார்.

10.8 வினாடிகளில் தூரத்தை நிறைவு செய்த அங்­கோலா நாட்­ட­வ­ருக்கு முத­லிடம் கிடைத்­துள்­ளது.

ஹிமேஷ தட­கள விளை­யாட்டுத் துறையில் இரண்­டா­வது சிறப்­பான நேரத்தில் தூரத்தை நிறைவு செய்­துள்ளார்.

தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் தங்கப் பதக்கம் வென்று சாதித்த ஹிமேஷ தற்­போது பயிற்சிகளுக்காக ஜமைக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்