இவரைத் தெரியுமா? கண்டுபிடித்துத் தந்தால் ஒரு இலட்சம் டொலர் பரிசு!

படத்திலுள்ளவரின் பெயர் பத்ரேஷ்குமார் சேட்டன்பாய் படேல்.  இந்தியர்.  அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக இவரை   அமெரிக்க துப்பறியும் பொலிஸ் அமைப்பான பெடரல் பீரோ ஒப்  இன்வெஸ்டிகேஷன் (FBI) அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் திகதி  பிரபலமான உணவு விடுதியொன்றில்  சமையல் அறைக்குள் வைத்து இவர்  தனது மனைவியான பாலக் பத்ரேஷ்குமார் படேல் என்பவரைக்  கொலை செய்துவிட்டு இன்றுவரை தலைமறைவாகி உள்ளார். இந்தக் கொலை அப்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த இரண்டு வருடமாகப் போலீசார் இவரைத் தேடியும் இவர் சிக்கவில்லை.
அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தின் அருண்டேல் மில்ஸ் போல்வார்ட் பகுதியில் ‘டங்கின் டோனட்ஸ்’ என்ற பிரபலமான உணவகம் ஒன்றின் சமையற் கூட்டத்திலேயே குறித்த கொலை நிகழ்ந்துள்ளது.
தற்போது பத்ரேஷ் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க போலீசார் அறிவித்துள்ளனர். அத்தோடு, அவரைக் கைது செய்ய உதவினால் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாகத் தரப்படுமென்றும் தெரிவித்துள்ளனர்.
   எஸ். ஹமீத்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்