சூடு!!


முதுகால வடியிது
முகத்தத் தீய்க்குது
இதுகால வரைக்கும்
இல்லாத சூடு போல்.

வெளிய இறங்கேலா
விறாந்தைல உறங்கேலா
குளியல் முடிந்தவுடன்
குப்பென்று வேர்க்குது

ஜன்னல துறந்தாலும்
ஒண்ணும் ஆகல்ல
கண்ணால பார்க்கேலா
கடுமையா குத்துது

வெயில்ல போய் வந்தா
கெய்ல்ல போல் ஆகி
முகமெல்லாம் கறுக்குது
ஜெகமே வெறுக்குது

தொண்ட காயிது
மண்ட தீயுது
எண்ட உம்மாவே
என்ன சூடிது

நுளம்புக் கடிக்கு
நூல் சேலை போர்த்தினா
கிளம்புது வியர்வை
குழம்புது மூளை

தோலெல்லாம் சொறியுது
தொடர்ந்து சிவக்குது
வேலல்ல பேன் போட்டும்
வெப்பமா வீசுது

சூடு குறையவும்
சுகமாக மாறவும்
நாடிப் பிரார்த்தித்தா
நாயன் மாற்றுவான்
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்