விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து செல்லப்படவுள்ளார் தினகரன்

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் நோக்கில் பண விநியோகத்தில் ஈடுப்பட்ட  அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தானாக விலகிக்கொண்ட டி.டி.வி. தினகரன், விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டவுள்ளார்.

அந்தவகையில், டெல்லி பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தினகரன், எதிர்வரும் 22ஆம் திகதி டெல்லிக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும், விசாரணையின் பின்னர் கைது செய்யப்படலாம் எனவும் கூறுப்படுகின்றது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தினகரன் ரூ.50 கோடி இலஞ்சம் கொடுத்ததாக டெல்லியில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இவர் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தானாக விலகிக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்