கடத்தப்பட்ட நடிகை – திரையுலகில் பரபரப்பு

‘போடா போடி’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்டபடங்களில் நடித்தவர் வரலட்சுமி. இவர் தற்போது ‘அம்மாயி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’, ‘சத்யா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், பெண்களின் பாதுகாப்புக்காக ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், வரலட்சுமி கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு புகைப்படம் வைரலாக பரவத் தொடங்கியது. மேலும் #VaralaxmiGotKidnapped என்ற ஹாஸ் டேக்கும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. இதனால் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவேளை படத்தின் புரோமோஷனுக்காக இதுபோல் படத்தை வெளியிட்டுள்ளார்களா? அல்லது வரலட்சுமி நடத்தி வரும் ‘சேவ் சக்தி’ அமைப்புக்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்களா? என்று பலரது தரப்பிலும் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது.

எனவே, இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் விசாரிக்கும்போது, இது வரலட்சுமி நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷன் என்று கூறப்பட்டுள்ளது. அந்த படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை அறிவிக்கப்போகிறார்களாம். அதற்கு முன்னதாக பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்