காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது சுமந்திரன்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும்  காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது.ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன்நகரலாம் படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுகிறது. என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில்  முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது  கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்; அவர் மேலும் தெரிவிக்கையில்
இராணுவனத்தின் தனியார் காணிகளை விடுப்பதுதான் தங்களது முதல் நோக்கம் என தீர்மானித்து அறிவித்திருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்;டத்திலே இருக்கின்ற ஒரேயொரு பிரச்சினை என்று அடையாளம் கண்டிருப்பது என்னவென்றால் பல காணிகள் அரச அதிகாரிகள் தனியார் காணிகள் என்று அடையாளப்படுத்தியதை இராணுவத்தினர் அரச காணிகள் ஷஎன்று நினைத்திருக்கின்றார்கள். காரணம் காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியிருக்கிறது ஆனால் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.ஆரம்பமாகியவுடனே அது அரச காணி என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள். அது பற்றி கலந்துரையாடல்களுக்கு பின் நாங்கள் விளக்கம் கொடுத்த பின் அந்தக் காணிகள்  தொடர்பிலும் அவர்கள்  குறித்தச் செல்கின்றார்கள். அந்தக் காணிகளும் தனியார் காணிகள் என்று உறுதிப்படுத்தினால் அவற்றையும் விடுவிப்பதான நடவடிக்கையை எடுப்பதாக சொல்லியிருக்கின்றார்கள்.
அதைவிட அரச காணிகளிலும் கூட பொது மக்களின் தேவைக்காக இருக்கின்ற பல பிரதேசங்கள் அடையப்படுத்தப்பட்டது அவர்கள் சொன்ன பதில் தாங்கள் தனியார் காணிகளில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு முன்னுரித்தாக தாங்கள் கருத்தில் எடுத்ததாகவும் இதை தாங்கள் கருத்தில் எடுக்கவில்லை என்று ஆனால் அப்படியான ஒரு விண்ணம் கொடுக்கப்படுமாக இருந்தால் அதனையும் நிரற்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கின்றாhகள்.
மற்றொரு விடயம் அவர்கள் ஒரு இடத்தில் கட்டடங்கள் அமைத்து இரு;ககின்ற நிலையில் இன்னொரு இடத்திற்கு மாறுகின்ற போது  கட்டடங்கள் அமைத்த செலவுகள்  உண்டு அரசாங்கம் அந்த செலவுகளை  வழங்குகின்ற பட்சத்தில் தாங்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு செல்லலாம் என்கின்றார்கள். நேற்றைக்கும்(19)  இன்றைக்கும்(20) அதற்கு முன்னரும் நடத்திய கலந்துரையாடிலில் இருந்து இது இப்போது புலனாகிறது. இராணுவம் ஓரிடத்தில் இருந்த இன்னோர் இடத்திற்கு மாறுகின்ற போது அதன் செலவு பெரியதொரு தடையாக இருக்கிறது ஆகவே நாங்கள் இது குறித்தும் அரசாங்கத்தோடு பேசி ஏதோ ஒரு விதமாக நல்லிணகத்தின் ஒரு படிமுறையாக எங்கையாவது இருந்து பணத்தை இதற்காக விசேடமாக பெற்றுகொடுத்தால் கூட இராணுவம் இடங்களை விடுவதற்கு தயாராக இருக்க்pறார்கள் எனவே அந்த நடவடிக்கைளையும் நாங்கள் தொடர்ச்சியாக எடுப்பம்.
நாங்கள் கேட்காத ஒரு விடயத்தை இராணுவத்தினர் சொன்னார்கள்  ஆதாவது இரணைமடுவை சுற்றியுள்ள 2439 ஏக்கர் நிலத்தை விடுப்பதாக சொன்னார்கள் அது முல்லைத்தீவு மாவட்டம் என்பதால் கிளிநொச்சி கூட்டத்தில் எடுக்கவில்லை ஆனால் அந்தக் காணிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார்கள். அதனை தவிர உறுதியாக இப்போது எனக்கு சரியான தகவல்கள் சொல்ல முடியாது. ஆனால் இன்னொன்றை சொன்னார்கள் தங்களின் கட்டுப்பாட்டில் 24 ஆயிரம் ஏக்கர் இருந்ததாகவும் ஆனால் தற்போது 783 எக்கர்தான்  தற்போது தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பாகவும் அதை படிபடிப்யாக தாங்கள் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்;கள் அன்னளவாக நூறு ஏக்கர் உடனடியாக விடுவிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது. என்றார்
.
 இந்த கூடட்த்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்ஏ சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன். மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மாவட்ட அரச அதிபர்  சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சமந்தி வீரசிங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
 எஸ்.என்.நிபோஜன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்