இப்படியும் சம்பவங்கள் நடக்கிறதா??

திருகோணமலை.மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இளம் யுவதிகளை பஸ் நிறுத்துமிடங்களில் நிறுத்தி  விட்டு   அவர்களுடைய பெற்றோர்கள் வழிப்போக்கர்களிம் பயமுறுத்தி பணத்தை பறிக்கும் புதிய யுக்திகளை கையாளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியிலேயே இச்சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.
மேலும் தெரியவருவதாவது வயது வந்த இளம் சிறார்களை பஸ் நிறுத்துமிடங்களில் நிறுத்தி பயணம் செய்வதற்காக பஸ்ஸை காத்திருக்கும் அரச தொழிலில் ஈடுபடுபட்டு வரும் நபர்களை பயமுறுத்தி அதாவது இளம் யுவதியுடைய கையை பிடித்ததாகவும்,ஆபாட படங்களை காட்டியதாகவும் கூறி பணத்தை பயமுறுத்தி பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக பஸ் தரிப்பிடங்களில் முற்சக்கர வண்டி சாரதிகள் இச்சம்பவத்திற்கு உதவி வழங்கி வருவதாகவும் தெரியவருகின்றது.
பஸ் தரிப்பிடத்திற்கருகில் இளம் சிறார்களை நிறுத்தி விட்டு முற்சக்கர வண்டி சாரதியுடன் பேசிக்கொண்டிருப்பது போல காட்டிக்கொண்டு தனிமையாக நிற்கும் சிறுமியுடன் வழிப்போக்காளர் பேசும் போது விரைவாக வந்து சிறுமிக்கு ஆபாஷ படம் காட்டியதாக பயமுறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு செல்லப்போகின்றேன் எனக்கூறி பணத்தை கேட்டு வருவதாகவும் அதற்கு முற்சக்கர வண்டி சாரதிகள் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே பயணிகள் மிகவும் அக்கறையுடன் செயற்படுமாறும் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்