வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயில் மோதி ஒருவர் சாவு

வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா கொக்குவெளி பகுதியில் சென்று கொன்டிருந்த போது பாதுகாப்பற்ற ரயில் கடவையினை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகிள்ளது. இவ்விபத்தின் இடம்பெற்றிருந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் இழுத்துச்செல்லப்பட்டதுடன் மற்றையவர் மோட்டார் சைக்கிளில்இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்து பற்றிய மேலதிக விசாரனையினை வவுனியா புகையிரத நிலைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்